குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!!

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!!

சென்னை: இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினம் குறித்து அறிவது சட்டப்படி குற்றமாகும்.இந்நிலையில்
யூடியூபர் இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு அதனை ஒரு விழாவாக கொண்டாடினார்.

சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. டாப் யூடியூபர்களில் ஒருவரான இவர் பிரபல உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவை ருசித்து அதன் தரம் மற்றும் சுவை குறித்து பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம்.இதனால் இவருக்கு ஏகப்பட்ட உணவு பிரியர்கள் ரசிகர்களாக உள்ளனர். இப்படி இருக்க இவர் திடீரென தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது குற்றமாகும். அதை தெரிந்து கொண்டு சிலர் பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வது உண்டு. இதனால் பெண்களின் பிறப்பு சதவீதம் குறைய வாய்ப்புண்டு. ஆனால் வெளிநாட்டில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினம் குறித்து அறியலாம்.

இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான் துபாய் சென்று பாலினம் குறித்து அறிந்து கொண்டு தனது குடும்பத்தாருடன் விழாவாக கொண்டாடியுள்ளார்.இதை தனது யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
என்னை கண்ட சிலர் இர்ஃபான் செய்வது தவறு என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதனை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இர்ஃபான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு அது தொடர்பான வீடியோவையும் தனது யுடியூப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.


மன்னிப்பு கேட்டுக்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.