ஆசிய பயணங்களின் இறுதி கட்டமாக சிங்கப்பூருக்கு வருகை புரியும் போப் பிரான்சிஸ் ...!!!
சிங்கப்பூர்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய ஆசிய பயணத்தின் இறுதி கட்டமாக அவர் இன்று (செப்டம்பர் 11) சிங்கப்பூர் வருகிறார்.
வத்திக்கான் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் திமோர்-லெஸ்ட்டேயில் இருந்து சிங்கப்பூர் வந்தடைகிறார்.
போப் பிரான்சிஸின் முதல் சிங்கப்பூர் பயணம் இதுவாகும்.
அவரது பயணம் இன்று முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை நீடிக்கும்.
வியாழன் (செப்டம்பர் 12) அன்று காலை 10.30 மணியளவில்,அவர் பொது உரை நிகழ்த்துவார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) கலாச்சார மைய அரங்கில் “அதிகாரிகள், சிவில் சமூகம் மற்றும் தூதரகப் படையினருடன்” ஒரு சந்திப்பும் நடைபெறும்.
பிற்பகலில், மாலை 5.15 மணிக்கு தொடங்கும் தேசிய மைதானத்தில் மாஸ் தலைமை தாங்குவார்.
87 வயதான போப் பிரான்சிஸ் அவர்களுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இறுதியாக வெள்ளிக்கிழமை காலை, போப் பிரான்சிஸ், செயின்ட் தெரசா இல்லத்தில் முதியோர் குழுவைச் சந்திக்க உள்ளார்.
மதியம் சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன், கத்தோலிக்க ஜூனியர் கல்லூரியில் இளைஞர்களுடன் மதங்களுக்கு இடையிலான உரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்.
சிங்கப்பூரின் ஆர்க்கிட் மலருக்கு போப் பிரான்சிஸ் பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here