வத்திகனுக்கு வருகை புரிந்த சிங்கப்பூர் அதிபரை வரவேற்ற போப் பிரான்சிஸ்!!

வத்திகனுக்கு வருகை புரிந்த சிங்கப்பூர் அதிபரை வரவேற்ற போப் பிரான்சிஸ்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வத்திகனில் வருகை புரிந்ததை தொடர்ந்து போப் பிரான்சிஸ் அவரை வரவேற்றார்.

ஜனாதிபதி தர்மன் ஐரோப்பாவில் உள்ள இத்தாலி மற்றும் எஸ்தோனியாவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.ரோம் விமான நிலையத்தை வந்தடைந்த அதிபர் தர்மனுக்கு இத்தாலி ராணுவ அதிகாரிகள் அரசு மரியாதை அளித்தனர்.

சிங்கப்பூர் அதிபர் ஒருவர் 2016க்குப் பிறகு இத்தாலிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்வது வருவது இதுவே முதல் முறை.

மேலும் ஜனாதிபதி தர்மன் இத்தாலிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறகு திரு.தர்மன் G30 மாநாட்டில் கலந்து கொள்வார்.

போப் பிரான்சிஸ் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் செல்கிறார்.

சுமார் மூன்று மாதம் மேற்கொள்ளவுள்ள பயணத்தில் போப் பிரான்சிஸ் இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.

அதன்பிறகு, அவர் 3 நாட்கள் சிங்கப்பூரில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போப்பின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். கடந்த ஆண்டு, 86 வயதான போப் பிரான்சிஸ், உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.