போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!!

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு...!!!

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வத்திக்கனில் காலமானார்.

கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து போலந்தில் சனிக்கிழமை தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஜனாதிபதி ஆண்ட்ரே டூடா அறிவித்தார்.

போலந்தில் சுமார் 38 மில்லியன் மக்கள்தொகையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள்.

போப் ஆண்டவருக்கு வத்திகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வெளியே இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

இறுதிச் சடங்கின் முடிவில் இறுதி பிரார்த்தனை நடைபெறும்.

பின்னர் அவரது உடல் செயிண்ட் மேரி மேஜரில் அடக்கம் செய்யப்படும்.

அவர் 12 ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் வாழ்ந்த வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version