போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு...!!! வத்திக்கன் நகருக்கு வருகை தரும் உலக தலைவர்கள்..!!!!

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று ரோமில் நடைபெற உள்ளது.
இந்த இறுதிச் சடங்கில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் வத்திகன் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் ஜோ பைடன்,பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து, வங்காளதேச பிரதமர் முகமது யூனுஸ்,இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் முன்னாள் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ ஆகியோரும் அடங்குவர்.
2022 ஆம் ஆண்டு ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, உலகத் தலைவர்கள் பலரும் ஒன்றாக திரள்கிறார்கள்.
இறுதிச் சடங்குகள் வத்திகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வெளியே நடைபெறும்.
பிறகு அவரது நல்லுடல் செயிண்ட் மேரி மேஜரில் அடக்கம் செய்யப்படும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan