வரும் டிசம்பர் மாதம் பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் சேவைக்காக திறக்கப்படும்!!

வரும் டிசம்பர் மாதம் பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் சேவைக்காக திறக்கப்படும்!!

வரும் டிசம்பர் 10-ஆம் தேதி பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியிலிருந்து ரயில் சேவை தொடங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சேவை அடுத்து வடக்கு-தெற்கு பாதையில் MRT நிலையனளின் எண்ணிக்கை 17 ஆகா உயர்ந்துள்ளது.

இது JTC தொழிற்பேட்டை,சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைகழக வளாகம் (SIT) மற்றும் பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதி ஆகியவற்றுக்கு இடையே இணைப்பாக செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

JTC Business park மற்றும் SIT வளாகத்தில் 28000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 12000 மாணவர்களும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அந்த MRT நிலையம் பொங்கோல் கோஸ்ட் முனையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ளது.

மேலும் சைக்கிள் நிறுத்தி வைப்பதற்கான வசதியும் உள்ளது. அங்கு 300 க்கும் அதிகமான சைக்கிள்களை நிறுத்தி வைக்கலாம்.

2018-ஆம் ஆண்டில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.SBS TRANSIT நிறுவனத்திடம் கடந்த ஆகஸ்ட் மாதம் (2024) நிலையம் ஒப்படைக்கப்பட்டது.