சிங்கப்பூரில் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டம்!!

சிங்கப்பூரில் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டம்!!

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஜனவரி 6 ஆம் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அந்த மின் விளக்குகள் ஒரு மாதம் வரை லிட்டில் இந்தியாவில் ஜொலிக்கும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுற்றுப்புற அமைச்சர் Grace Fu பண்டைய கலாசாரத்தை தொடர்பு இன்றைய சூழலில் வாழ்வதற்கு நம்பிக்கை அளிப்பதாக தனது கருத்தை தெரிவித்தார்.

லிஷா என்று அழைக்கபடும் லிட்டில் இந்தியா பண்டைய கலாசாரத்தை மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது என்று அமைச்சர் கூறினார்.
பூமியும் சூரியனும் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் அவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று அவர் கூறினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கால்நடைகளையும் காண்பதற்கான ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தது.

விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து ஜனவரி 5-ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள Poli@Clive steet க்கு கால்நடைகள் வந்தடைந்தன.