சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்!! கைது செய்த காவல்துறை!!

சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்!! கைது செய்த காவல்துறை!!

சிங்கப்பூர்: கடன் கொடுத்தவர் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஒருவருக்கு வயது 19 என்றும் மற்றொருவருக்கு 27 வயது என்றும் கூறப்படுகிறது.

கடன் கேட்டு மிரட்டும் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 4 ஆம் தேதிகளில் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எங்கர்வேல் வீதி மற்றும் பொங்கோல் பிளேஸ் ஆகிய இடங்களில் அமைந்துள்ள வீடுகளில் கடன் அச்சுறுத்தல் தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்கள் எச்சரிக்கை குறிப்பை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடனும், காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு நேற்று (நவம்பர் 8) கைது செய்தனர்.

இன்று நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

5,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சம் 6 கசையடிகள் தண்டனை விதிக்கப்படலாம்.