இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
வெளியான முதல் வாரத்திலேயே வசூல் வேட்டையில் கலக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் அதைப்பற்றி எதுவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் மாரி செல்வராஜின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவருக்கு காரை பரிசாக அளித்த சம்பவம் சோசியல் மீடியாக்களில் வைரலானது.
இப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்ட பிரச்சனை இன்னும் ஓய்ந்ததாக தெரியவில்லை. தற்பொழுது ஒரு புதிய பிரச்சனை கிளம்பி உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேல் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 3 பேரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபடி ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் உதயநிதி ஸ்டாலின் சோபாவில் அமர்ந்திருக்கின்றார். வடிவேல் மற்றும் இயக்குனர் ஆகியோர் சாதாரண பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து உள்ளனர். சோபாவானது பின்னால் நகட்டி வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் சோபா பின்னால் இருக்க ஏன் வடிவேல் மற்றும் மாரி செல்வராஜ் மற்றும் பிளாஸ்டிக் சாரில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வியை தற்பொழுது அனைவரும் எழுப்பி உள்ளனர்.
இதைப்பற்றி இன்னொரு தரப்பு கூறும் பொழுது அது உதயநிதி வீடு இல்லை என்றும், வடிவேலு வீடு தான் என்றும், வடிவேலு தான் உதயநிதி ஸ்டாலினை சோபாவில் உட்கார வைத்துவிட்டு தானாக பிளாஸ்டிக் சேரில் அமர்ந்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
இதில் எது உண்மை என்று தெரியாத நிலையில் அவரவர் நிலையிலிருந்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.