சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்குத் திருவாட்டி ஃபூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
பேரங்காடிகளில் ஜூலை 2023 முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குறைந்தபட்சம் 5 காசுகள் வரை வசூலித்தது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட ஓராண்டில், பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் வரை குறைத்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, அனைத்து கடைகளிலும் ஒரு பிளாஸ்டிக் பைக்கு குறைந்தபட்சம் 5 காசுகள் வசூலிக்க தேவையில்லை. இருப்பினும், சில சில்லறை விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
சில கடைகள் பிளாஸ்டிக் பைகள் கொடுப்பதில்லை என்ற வழக்கத்தையும் கொண்டுள்ளது.
இதனால் சிங்கப்பூரில் சமீப காலமாகவே பயனாளர்களிடையே பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
Follow us on : click here