2025 ஆண்டு இறுதிக்குள் மேலும் 2 புதிய Xiaomi கடைகள் திறக்க திட்டம்...!!!!
சிங்கப்பூர்: சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் 2 புதிய கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஏற்கனவே அதன் 8 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
புதிய கடையில் கூடுதல் தயாரிப்புகள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதிய வணிக மாதிரியை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூர் மக்களிடையே Xiaomi தயாரிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.
புதியதாக திறக்கப்படும் கடைகளுக்கு ஆள்சேர்ப்பு பணிகளும் நடைபெறுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Xiaomiயின் தென்கிழக்கு ஆசிய பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் டேங் கூறுகையில், சில கடைகளை சொந்தமாக நிர்வகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த Xiaomi தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்தார்.
Follow us on : click here