சிங்கப்பூரின் தேசிய பராமரிப்பு திட்டமான Healthier SG-யில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனநல சேவைகள் சேர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சர் Ong Ye Kung தெரிவித்தார்.
மேலும் நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை Healthier SG திட்டத்தில் சேர்க்கப்பட்டது போலவே மனநல பாதிப்புகளுக்கான தடுப்பு மற்றும் ஆதரவு சேவைகளை சேர்ப்பது குறித்தும், அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் தனிநபர்களின் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை தனது அமைச்சகத்தில் உள்ள மருத்துவர்கள் நன்கு தெரிந்திருப்பதாக கூறினார்.
தற்போது 400க்கும் மேற்பட்ட பொது மருத்துவர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் சில ஆண்டுகளில் அவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் Healthier SG மூலம் தனிநபர்கள் தங்கள் மன உறுதியை வளர்த்துக் கொள்ளவும், மன அழுத்தத்தை சமாளிக்கவும், தேவைப்படும்போது உதவியை நாடவும், உதவுவோம் என்று அவர் உறுதி அளித்தார்.