தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!
தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இந்த சம்பவம் தென் கொரியாவின் மிக மோசமான விபத்து என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானம் விபத்தில் சிக்கிய சில மணி நேரத்துக்கு முன் செய்யப்பட்ட சோதனையில் தரையிறக்கும் விசையில் எந்த கோளாறும் கண்டறியப்படவில்லை.இதனை அந்நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி Kim Yi-Bae தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து பல கேள்விகள் எழுகின்றன. விபத்து நடப்பதற்கு முன் பறவை ஏதும் தாக்கியதா,வானிலை மாற்றம் காரணமா நிகழ்ந்ததா என கேள்விகள் தொடர்கிறது.
தென் கொரியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Follow us on : click here