தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் Jeju Air விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி கோர விபத்து நேர்ந்துள்ளது.அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சுவரில் மோதியது.
சிங்கப்பூர் நேரப்படி டிசம்பர் 29 (இன்று) காலை 8 மணியளவில் விபத்து நடந்தது.தாய்லாந்தில் இருந்து விமானம் 175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது.
பலத்த வெடி சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர்.
மேலும் அந்த விமானத்தில் தாய்லாந்து நாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி தாய்லாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.போயிங் 737-800 விமான விபத்தை கையாள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தற்காலிக அதிபர் Choi Sang-Mok கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போயிங் நிறுவனம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.விசாரணைக்கு உதவுவதாக அது கூறியது .
இந்த கோர விபத்து பறவைகள் காரணமாக நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.பறவைகள் மோதியதால் விமானத்தின் தரையிறங்கும் கருவி செயலிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த விமான விபத்தில் இருவர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.179 பேர் பலியாகியுள்ளனர்.இதனை யோனாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.