Tamil Sports News Online

Jurong தீவில் இருக்கும் பெட்ரோலிய ரசாயன ஆலையில் சூரிய சக்தி தகடுகள் பொருத்த திட்டம்!

Jurong என்ற தீவில் பெட்ரோலிய இரசானிய ஆலை இருக்கிறது. இது சிங்கப்பூருக்கு பெரிய மின்னோட்ட செயலியாக உருமாற இருக்கிறது.

அரசாங்கம் அங்குள்ள கட்டடக் கூரைகளில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனத்திடம் நிலங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினர் .

Jurong தீவில் இருக்கும் ஆலையில் சூரிய தகடு சக்தி பயன்பாட்டை முடக்கி வருவதற்காக JTC நிறுவனம் ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அங்கு 60 எக்டர் பரப்பளவு காலியாக இருக்கிறது. இது ஏறத்தாழ 85 கால்பந்து திடல்களின் பரப்பளவாகும்.

இத்திட்டமானது,மின்சார கொள்திறனை 12 மெகாவாட்டில் இருந்து 100 மெகா வாட் வரை அதிகரிப்பதாகும். அதாவது, வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் 25 நாலறை வீடுகளுக்கு ஓராண்டிற்குள் மின்னூட்டுவதற்கு சமம். சூரிய சக்தி தகடுகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது அவசியம். சூரிய சக்தி தகடுகள் குறிப்பிட்ட அளவுக்கு ஆற்றலை பெற்றிருக்க வேண்டும். நிலைத்தன்மை மிக்க ஆலை உருவாக்குவதற்கு மிக முக்கியமானது ஒன்று.