சத்தம் இல்லாமல் கமுக்கமா ஆர்டர் போட்டுருங்க...!!!ரூ.5000 தள்ளுபடியில் விற்பனைக்கு வரும் ஒன் பிளஸ்..!!!
ஒன்பிளஸ் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 13 வரை ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் நடைபெறுகிறது.அமேசான், ஒன்பிளஸ் ஸ்டோர், குரோமா மற்றும் விஜய் சேல் போன்ற பல்வேறு தளங்களில் இந்த விற்பனை தொடங்கியுள்ளது.OnePlus 13 மற்றும் OnePlus 13R போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
OnePlus 13 போனின் விலை மற்றும் அம்சங்கள்: OnePlus 12 GB RAM + 256 மெமரி மாடலின் விலை ரூ. 69,998. 16 GB RAM + 512 GB மெமரி மாடலின் விலை ரூ. 76,998. இந்த விலையில், OnePlus Red Rush Days விற்பனையின் போது ரூ. 5,000 வரை வங்கி தள்ளுபடி கிடைக்கிறது.
ரூ.7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI சலுகையும் உள்ளது. இந்த வங்கி தள்ளுபடி ICICI வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. எனவே, நீங்கள் இந்த OnePlus 13 போனை ரூ.64,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம்.
இதன் வண்ணங்களை பொறுத்தவரை மிட்நைட் ஓஷன், பிளாக் எலிப்ஸ் மற்றும் ஆர்க்டிக் டவுன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இது 6.82-இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 2K தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம், 4500 nits உச்ச பிரகாசம் மற்றும் செராமிக் குவார்ட்ஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 15 OS, ஆக்ஸிஜன் OS 15 மற்றும் சோனி LYT808 சென்சார் கொண்ட 50MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4nm மொபைல் சிப்செட் மற்றும் அட்ரினோ 830 GPU கிராபிக்ஸ் கார்டு மூலம் இயக்கப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரை சாம்சங் GN1 சென்சார் கொண்ட 50MP அல்ட்ரா வைட் + சோனி LYT600 சென்சார் கொண்ட 50MP டெலிஃபோட்டோ + சோனி IMX615 சென்சார் கொண்ட 32MP செல்ஃபி ஆகியவற்றை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 6000mAh வேகமான 100W அதிவேக சார்ஜிங் வசதி உள்ளது.
OnePlus 13R விலை மற்றும் அம்சங்கள்:
இந்த OnePlus போன் 16GB RAM + 512GB சேமிப்பு மாடலின் விலை ரூ. 48,998 மற்றும் 12GB RAM + 256GB சேமிப்பு மாடலின் விலை ரூ. 42,998. இப்போது, OnePlus Red Rush Days விற்பனையின் போது ரூ. 3,000 உடனடி வங்கி தள்ளுபடியில் கிடைக்கிறது.
மேலும், முந்தைய மாடலைப் போலவே, இதுவும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் நோ-காஸ்ட் EMI உடன் வருகிறது. எனவே, ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI சலுகை உள்ளது. இதற்கும், நீங்கள் ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும்.இந்த தள்ளுபடியுடன், நீங்கள் இந்த போனை ரூ. 44,998 பட்ஜெட்டுக்குள் ஆர்டர் செய்யலாம்.
இந்த போன் 80W சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இது octa-core Snapdragon 8 Gen 3 4nm சிப்செட், Adreno 750 GPU கிராபிக்ஸ் கார்டு, Android 15 OS மற்றும் ActiOS 15 உடன் வருகிறது.
கேமராவை பொறுத்தவரை சோனி LYD700 சென்சார் கொண்ட 50MP பிரதான கேமரா + சோனி IMX355 சென்சார் கொண்ட 8MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது.
டெலிஃபோட்டோ ஷூட்டரில் சாம்சங் GN1 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் செல்ஃபி ஷூட்டரில் சோனி IMX480 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இது நெபுலா நொயர் மற்றும் ஆஸ்ட்ரல் டிரெயில் வண்ணங்களில் கிடைக்கிறது.இந்த OnePlus Red Rash Days விற்பனையானது ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 13 வரை மட்டுமே நடைபெறும் என்பதால் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan