இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்…!!!

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்...!!!

வேலி மற்றும் புதர்களில் வளரும் இந்த தாவரம், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு உயர் மருத்துவ மூலிகையாகும். இந்த தாவரம் எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.மேலும் பிரண்டையை வைத்து மூலிகை தைலம் தயாரிக்கலாம். இந்த தைலம் இடுப்பு வலியை போக்கவல்லது. இங்கு பிரண்டை மூலிகை தைலம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

பிரண்டையில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:-

✨️ வைட்டமின் சி
✨️ வைட்டமின் ஈ
✨️ கால்சியம்
✨️ பாஸ்பரஸ்
✨️ நார்
✨️ ஃபிளேவனாய்டு டானின்
✨️ கரோட்டின்

பிரண்டை மூலிகை தைலம்:

தேவையான பொருட்கள்:-
🍁 நெய் – 50 மிலி
🍁 வெந்தயத் துண்டுகள் – ¼ கப்
🍁 மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

👉 முதலில் பிரண்டையை எடுத்து அதன் நார் மற்றும் வெளிப்புறத் தோலை உரிக்கவும்.

👉 பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாடியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

👉 அதன் பிறகு, ஒரு இரும்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றவும்.

👉:எண்ணெய் சிறிது சூடானதும், அரைத்த பிரண்டையை அதில் சேர்க்கவும்.

👉 அடுத்து, கால் டீஸ்பூன் மஞ்சள் தூளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.


👉 இந்த எண்ணெயில் பிரண்டை கலவையானது நன்கு கலந்து, நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து, பின்னர் அடுப்பை அணைக்கவும்.

👉 இந்த எண்ணெயை குளிர்வித்து, வடிகட்டி, ஒரு பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும்.

👉 இதை இடுப்பு பகுதியில் தடவினால் வலி குறையும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த தைலத்தைப் பயன்படுத்தலாம்.

👉 பிரண்டையில் சட்னி, பிரண்டை துவையல் போன்றவற்றை செய்து சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, பசியின்மை போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.