சிங்கப்பூரிலிருந்து மெக்காவிற்கு பயணத்தை தொடங்கிய யாத்ரீகர்கள்!!

சிங்கப்பூரிலிருந்து மெக்காவிற்கு பயணத்தை தொடங்கிய யாத்ரீகர்கள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட முதல் குழு யாத்ரீகர்கள்.

முஸ்லிம்களின் புனித தளமான மெக்காவிற்கு நேற்று புறப்பட்டனர்.

சிங்கப்பூரிலிருந்து சுமார் 110 யாத்ரீகர்கள் புனித பயணத்தை தொடங்கியுள்ளனர்.

சமீப காலமாக அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் பரவல் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம், வெப்பநிலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு இடையே யாத்ரீகர்கள் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கவனமுடன் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் யாத்ரீகர்களை வழியனுப்பி வைக்க பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் விமான நிலையத்திற்கு சென்றார்.

இரண்டாவது குழு யாத்ரீகர்கள் ஜூன் 10ஆம் தேதி புனித யாத்திரை மேற்கொள்ள உள்ளனர்.

முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பு வைக்கும் அமைச்சர் மசகோஸ் ஸீல்கிஃப்லி யாத்ரீகர்களை வழி அனுப்பி வைப்பார்.