இந்தியாவில் தயாரிக்கப்படும் Everest மீன்கறி மசாலாவில் பூச்சி மருந்து!! திரும்ப பெற உத்தரவிட்ட சிங்கப்பூர்!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் Everest மீன்கறி மசாலாவில் பூச்சி மருந்து!! திரும்ப பெற உத்தரவிட்ட சிங்கப்பூர்!!

Ethylene Oxide எனும் வேதிப்பொருள் இந்தியாவில் தயாரிக்கப்படும் Everest மீன்கறி மசாலா தூளில் கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

பூச்சி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதை திரும்ப பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த வேதிப்பொருளை உணவில் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.

ஹாங்காங் உணவு பாதுகாப்பு அமைப்பு அந்த மீன்கறி மசாலாவை திரும்ப பெற உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு அமைப்பும் உத்தரவு விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சி மருந்து கண்டறியப்பட்ட Everest மீன்கறி மசாலா பொட்டலங்கள் 50 கிராம் எடையுள்ளது.

இதனை உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் அவை காலாவதியாகிவிடும்.

அந்த வேதிப்பொருள் உடனடியாக உடலுக்கு தீங்கு விளைவிக்க விட்டாலும், நெடுங்காலம் அதனை உண்டு வந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தது.

அதனை வாங்கியவர்கள் சாப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.

உடல்நலனில் அக்கறை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியது.

சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்த SP Muthiah & Sons நிறுவனம் Everest மீன்கறி மசாலா தூளை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.