யீஷுன் HDB குடியிருப்பின் 9 வது மாடியிலிருந்து விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!!
சிங்கப்பூர்: யீஷுனில் உள்ள உயரமான கட்டிடத்தில் 9 வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகஸ்ட் 27 செவ்வாய்கிழமை காலை 10.35 மணியளவில் பிளாக் 624 யீஷுன் ரிங் ரோட்டில் உதவிக்கான அழைப்பு வந்ததாகக் கூறியது.
மேலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஒன்பதாவது மாடியில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் பகிரிடப்பட்டது.
அந்த வீடியோவில், அந்த நபர் 9 வது மாடி கட்டிடத்தின் வெளிப்புறத்தில் நின்று மறுபுறம் செல்ல முயற்சிக்கிறார். ஆனால் அவர் தடுமாறி கீழே விழுகிறார்.
அதிர்ஷ்டவசமாக, துணை மருத்துவர்களிடம் ஏற்கனவே உயிர் காக்கும் லைஃப் ஏர் பேக் தயாராக இருந்தது.
அவர் சரியாக லைஃப் ஏர் பேக்கில் விழுந்தார்.
அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அவருக்கு உதவினர்.
போலீசார் அளித்த தகவலின் படி அந்த நபர் மனநல (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow us on : click here