சிங்கப்பூர் கோவிட் -19 கட்டுப்பாடுகளைத் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்த உள்ளது.இனி சிங்கப்பூரில் நிரந்தர கோவிட் புதிய வழக்கநிலை பின்பற்றப்படும்.
இதனைச் செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.கடந்த சில ஆண்டுகளாக கிருமி தொற்று சீராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் வருங்காலத்தில் பெருந்தொற்று பரவினால் அதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதற்கு பொருத்தமானதா இருக்குமா என்றும் ஆராய்ந்து வருவதாக கூறினார்.
அனைத்துலக அளவில் கிருமி தொற்று பரவல் மற்றும் அதன் நெருக்கடிநிலை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.
தற்போது பல நாடுகள் அதன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் நிலைமையை அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருவதாகவும் இன்னும் மீதம் இருக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளரத்துவதற்கான முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறினார்.