சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை Peranakan Museum நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இந்த அருங்காட்சியத்தில் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
பெரனாக்கான் சமூகத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தின் சித்தரிக்கும் நோக்கில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
பெரனாக்கான் சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.பெரனாக்கான் சமூகத்தின் பாரம்பரிய கலாச்சார பண்புகளைப் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம் எடுத்துக்காட்டும்.
தற்போது அருங்காட்சியகத்தில் சீனப் Peranakan கலாச்சார படைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இக்காலத்திற்கு ஏற்ப மக்களைக் கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
Kebaya ஆடையில் அலங்கார பவனிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு வார இறுதியில் நடைபெறும்.