பிலிப்பைன்ஸில் திங்கட்கிழமை இரவு தலைநகரில் உள்ள கட்டிடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது.
பிலிப்பைன்ஸில் இதுவரை நடத்திய ஆள்கடத்தலுக்கு எதிரான சோதனை நடவடிக்கையில் மிகப் பெரிய சோதனை நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது.
இந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர் .சீனா ,வியட்நாம், சிங்கப்பூர் ,பாகிஸ்தான், கேமரூனியன் ,மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசிய குடிமக்களும் அடங்குவர்.
மீட்கப்பட்டவர்களில் நான்கு பேர் சிங்கப்பூரர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து தூதுரகம் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் CNA விடம் கூறியது.அவர்களுக்கு உதவி அளிக்க தூதரகம் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இருப்பதாக தெரிவித்தது.
மணிலாவில் ஆன்லைன் சூதாட்ட வேலைக்காக கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது .
இந்த சோதனை நடவடிக்கையின்போது கிட்டத்தட்ட 2700 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கபட்டவர்கள் Facebook மூலம் பிலிபைன்ஸ் வேலைக்கு வந்ததாக காவல்துறை கூறியது.
அவர்கள் 12 மணி நேரமும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறினர்.
அவர்கள் வெளியில் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை.
அவர்களுக்கு மிக குறைவான சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது.