ஒரு வாட்ச்சை வாங்குறதுக்கு நைட்டுலருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!!

ஒரு வாட்ச்சை வாங்குறதுக்கு நைட்டுலருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!!

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை(மார்ச்.26) காலையில் அயன் ஆர்ச்சர்ட் கடைப்பகுதியில் விற்கப்பட்ட ” வாட்ச்” வாங்குவதற்காக மக்கள் வெகு நேரம் வரிசையில் காத்திருந்தனர்.அது செவ்வாய்கிழமை விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து மக்கள் திங்கட்கிழமை இரவு முதலே அதற்காக வரிசையில் காத்திருந்தனர்.சுமார் 150 பேர் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் வரிசையில் நின்றனர்.

அதை ஓமெகா மற்றும் சுவாட்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த கைக்கடிகாரத்திற்கு ” மூன்சுவாட்ச்” என்று பெயரிட்டுள்ளது.

இந்த கைக்கடிகாரம் 2022 ஆம் ஆண்டு மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை $ 430 சிங்கப்பூர் டாலர்.

அவர்களை கடைக்காரர்கள் வரிசையாக அனுமதித்து வியாபாரம் செய்தனர், இதனை எத்தனை பேர் வாங்கி சென்றனர் என்பதை கடைக்காரர்கள் குறிப்பிடவில்லை.