ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!!

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!!

ஜொகூரில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தலைநகர் ஜொகூர் பாரு,கூலாய் பொந்தியான்,கோத்தா திங்கி,குளுவாங் ஆகிய இடங்களில் உள்ள 20 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 7 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான வெள்ளத்தால் இரண்டு பள்ளிகள் தண்ணீரில் மூழ்கின.

மேலும் 11 பள்ளிகளுக்குச் செல்ல முடியாத வகையில் வெள்ளம் பாதையை சூழ்ந்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,500க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்கள் 40க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.