சிங்கப்பூர் செல்பவர்கள் இதை தெரிந்து கொண்டு சென்றால் பணத்தை சேமிக்கலாம்!!

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்கள் அவர்களது செலவை எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றி காண்போம்.
S-pass,E-pass,NTS permit:
இந்த பாஸ்களில் சம்பளம் அதிகமாக இருக்கும்.ஆனால் செலவுகளை கணக்கிடும்போது செலவு செய்வது போக மீதி நாம் சேமிக்கும் பணம் வொர்க் பர்மிட் வைத்திருப்பவர்களின் சேமிப்பும் E-pass ,S PASS வைத்திருப்பவர்களின் சேமிப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கு தங்குமிடம் முற்றிலும் இலவசம் ஆகும்.
உணவு மட்டும்தான் அவர்களின் செலவு ஆகும்.
உணவும் குறைந்த விலையில் வாங்கிக் கொண்டாலும் அதே போல எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தாலும் ஒர்க் பர்மிட் வைத்திருப்பவர்கள் E-pass ,S PASS வைத்திருப்பவர்களின் சேமிப்பிற்கு அவர்களின் சேமிப்பு சமமாகதான் இருக்கும்.
E-pass ,S PASS இல் வேலைக்கு செல்பவர்களுக்கு செலவுகள் ஏன் அதிகமாக உள்ளது என்றால் தங்கும் இடத்திற்கான செலவு அவர்களுடைய செலவு.
ஓர் உதாரணமாக,
வொர்க் மேட்டில் வேலை செய்வோர் ஓவர் டைம் வேலை செய்து $1200 டாலர் மாதம் சம்பாதிப்பார்கள்.
E-pass ,S PASS இல் இருப்பவர்களுக்கு தங்குமிடம்,உணவு மற்றும் டிரான்ஸ்போர்ட் ஆகிய அனைத்தும் அவர்களின் செலவாகும்.
அவர்களுடைய சம்பளம் $2000 டாலர் அதற்கு குறைவாக $1700 முதல் $1800 டாலர்கள் தான் அவர்கள் வாங்குவார்கள்.
E-pass ,S PASS வைத்திருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் ஆகும் செலவு:
▫️ ரூம்ஸ் 400 வெள்ளி ,
▫️ டிரான்ஸ்போர்ட்டேஷன் 200 வெள்ளி,
▫️ food $200.
$2000 டாலர் சம்பளம் வாங்கினாலும் உங்க செலவுகள் போக கையில் $1200 டாலர்கள் தான் இருக்கும். ஆனால் ஒர்க் பர்மெட்டில் அப்படி இல்லை 1200 டாலர்கள் சம்பளம் வாங்கினால் அவர்களது செலவுகள் போக ஆயிரம் டாலர்கள் வரை சேமித்து விடலாம்.
இந்த செலவுகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதை காணலாம்.
நீங்களே தங்குமிடத்தைத் தேடி கொள்ளுங்கள் என்று கூறினால்
அங்கு தங்குமிடங்களை தேடுவதற்காகவே நிறைய app கள் இருக்கிறது அதில் மிக எளிமையாக ரூம்களை கண்டுபிடித்து விடலாம்.
இதை ஏஜென்ட்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
வேலைக்கு செல்வர்கள் தான் ரூம் தேட வேண்டுமா அல்லது நிறுவனத்திலேயே தங்குவதற்கான இடம் கொடுத்து விடுவார்களா என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஏஜென்ட்களை தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து தருமாறு கேளுங்கள்.
ஊழியர்கள் நிறுவனத்திற்கு அருகிலேயே தங்கும் இடத்தை தேர்வு செய்வது நல்லது.ஏனென்றால் தங்கும் இடத்திற்கும் நிறுவனத்திற்கும் தொலைவு அதிகமாக இருந்தால் அதற்கான செலவுகள் அதிகம் ஆகும்.
சிங்கப்பூரில் ஷேரிங் ரூமில் தங்கிக் கொள்ளலாம்.ஷேரிங் ரூமுக்கு குறைந்தபட்சம் $300 முதல் $350 வெள்ளிக்குள் எடுக்கலாம்.
இந்த வாடகையில் தங்கும் இடம் கிடைப்பது கடினம் தான் .ஆனால் அதிகபட்சம் $400 முதல் $500 வெள்ளி தான் பெரும்பாலும் கிடைக்கும்.
ஆனால் தேடினால் $300,$350 வெள்ளி வாடகையில் தங்குமிடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ரூம் தேடும்போது சமைப்பதற்கான வசதி உடைய இடமாக இருப்பது போல் தேடுங்கள்.நீங்கள் வெளியில் சாப்பிடுவதற்கு ஆகும் செலவை விட சமைத்து சாப்பிடுவதற்கு ஆகும் செலவு குறைவு .
தங்குமிடம் $350 வெள்ளி மற்றும் சாப்பாட்டிற்கு 100 வெள்ளி என்றால் மாதத்திற்கு 450 டாலர்கள் செலவு மட்டும்தான் ஆகும்.
இப்பதிவில் தெரிவிக்கப்பட்ட செலவுகளை தெரிவிக்கப்பட்டுள்ள வழிகளை முயற்சி செய்து சிங்கப்பூரில் உங்களுக்கு ஆகும் செலவுகளை குறைத்து அதிகமாக சேமித்து வாழ்க்கையில் வெற்றியடையுங்கள்.
Follow us on : click here