மக்களே இந்த கிரீமை வாங்காதீர்கள்…!!! எச்சரிக்கும் சுகாதார அறிவியல் ஆணையம்…!!!

மக்களே இந்த கிரீமை வாங்காதீர்கள்...!!! எச்சரிக்கும் சுகாதார அறிவியல் ஆணையம்...!!!

சிங்கப்பூர்: அனைவரும் தங்கள் உடலை பளபளப்பாகவும், மெருகுடனும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். அந்த வகையில் சருமம் பொலிவாக மற்றும் அழகுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் தேடித்தேடி பொருட்களை வாங்கி பயன்படுத்துவது உண்டு.

அப்படி வாங்கும் பொருள்களில் என்னென்ன கலப்படம் செய்துள்ளார்கள் என்பதை யாரும் கவனிப்பது இல்லை. அப்படி தெரியாமல் வாங்கும் பொருட்களால் ஏற்படும் பின் விளைவுகள் அதை பயன்படுத்திய பின்பே தெரிய வருகிறது.

சமீபத்தில் Touch Skin by DermaCare Skin Relief Treatment Cream ஐ 8 ஆண்டுகளாக பயன்படுத்திய வாடிக்கையாளர் ஒருவர் கடுமையான தோல் பிரச்சினைகளை அனுபவித்து உள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் அல்லது அறிமுகமில்லாத மூலங்களிலிருந்து தோல் தயாரிப்புகளை வாங்குவதன் ஆபத்துகளை இது வலியுறுத்தியது.

எனவே பொதுமக்கள் இந்த தயாரிப்பை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது.

அந்த பொருளில் காணப்படும் Betamethasone valerate என்பது ஒரு வகை ஸ்டீராய்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது மருத்துவ ஆலோசனையின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த கிரீம் பூச்சி கடித்தல், சின்னம்மை மற்றும் தோல் அழற்சி ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கலப்படம் செய்யப்பட்ட தோல் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட க்ரீமை பயன்படுத்தியவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அனைத்து விற்பனையாளர்களும் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️