மக்கள் இரட்டிப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்...!!! எங்கே..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள மக்கள் அடுத்து வரும் இரு மாதங்களுக்கு பேரங்காடிகளில் இரட்டிப்பு தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.
சமூக சுகாதார உதவித் திட்டத்திற்கு(Chas) நீல நிற மற்றும் ஆரஞ்சு நிற அட்டை வைத்திருப்பவர்கள் Fairprice பேரங்காடிகளிலும் Unity கடைகளிலும் இரட்டிப்பு விலை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரின் 60வது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த தள்ளுபடிகள் ஜனவரி 1 முதல் மார்ச் 1 வரை நடப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.
தற்போதைய தள்ளுபடி 3 சதவீதமாக உள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் இது 6 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாதாந்திர குடும்ப வருமானம் 1,500 வெள்ளிக்கும் குறைவான நபர்கள் சமூக சுகாதார உதவித் திட்டத்திற்கான நீல நிற அட்டையை பெறலாம்.
1,501 முதல் 2,300 வெள்ளி வரை குடும்ப வருமானம் உள்ள நபர்கள் சமூகச் சுகாதார உதவித் திட்டத்திற்கான (SASS) ஆரஞ்சு நிற அட்டையை பெறலாம்.
Follow us on : click here