மக்களே உஷார்!! அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம்!!

சிங்கப்பூரில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், மோசடிக்காரர்கள் MAS அதிகாரிகளை போல் ஆள்மாறாட்டம் செய்து குறைந்தது 41 பேரை ஏமாற்றியதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) மற்றும் MAS அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த மோசடியில் அவர்கள் மொத்தம் S$2.6 மில்லியன் பணத்தை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் MAS, SPF அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, அவர்களது பாதுகாப்பு கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு பாதிக்கப்பட்டவர்களை அறிவுறுத்துவார்கள்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்களின் வங்கிச் சான்றிதழ், கிரெடிட் கார்டு விவரங்கள் அல்லது OTPஐ சொல்லுமாறு கேட்பார்கள்.

பொதுமக்களிடம் SPF மற்றும் MAS அதிகாரிகள் ஒருபோதும் பணத்தை மாற்றவோ, OTP மற்றும் வங்கிச் சான்றுகளை கேட்கவோ மாட்டார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் DBS, OCBC மற்றும் UOB போன்ற வங்கிகள் அறிமுகப்படுத்திய புதிய ஊழல் எதிர்ப்பு அம்சங்களை பயன்படுத்தி தங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.