மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!!
சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.அங்கு சில காலமாக அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட போலி அழைப்புகள் வருவதாக காவல்துறை கூறியது.மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த போலி அழைப்புகளால் அதிக அளவில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலில் மோசடிக்காரர்கள் காவல் அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு மக்களின் சுயவிவரம்,அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.அதன் பின் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனைகள் நடந்த பிறகு ஏமாற்றப்பட்டதை உணர்வார்கள்.
மக்கள் அதிகப்படியான பணத்தை பரிவர்த்தனை செய்தால் முதலில் வங்கி மட்டும் தான் அந்த கணக்கை முடக்கும்.ஆனால் இப்போது மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக காவல்துறை வங்கி கணக்கை முடக்கும் அதிகாரத்தை மேற்கொண்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg