Singapore Job News Online

சிங்கப்பூரில் வேர்க்கடலைகள் மீட்டுக்கொள்ளப்படுகிறது!

சிங்கப்பூரில் Chang Ling வேர்க்கடலைகள் திரும்ப மீட்டுக் கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவித்துள்ளது.

இதில் cyclamate எனும் உணவு சேர்ப்புப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் விதிகளின்படி,இது ஒரு சில உணவு பொருட்களில் உபயோகப் படுத்த அனுமதி உண்டு.

ஆனால், வேர்க்கடலைகளில் அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது.

மீட்டுக்கொள்ளப்படும் பொருட்கள் சீனாவிலிருந்து வந்தவைகள்.இவற்றின் காலாவதி தேதி அக்டோபர் 2,2023.

இந்த பொட்டலங்களின்எடை 350 கிராம்.Yan Tai Yit நிறுவனத்திற்கு இறக்குமதியாளர் உத்தரவிட்டுள்ளார்.

Cyclamate என்ற உணவுச் சேர்ப்பு பொருள் கண்டறியப்பட்ட வேர்க்கடலைகளை சாப்பிடுவதால் உடனடி சுகாதார ஆபத்து ஏதும் ஏற்படாது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

ஆனால், இதனை நீண்ட காலத்திற்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியது.