தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பாடாங்!UNESCO உலக மரபுடமைப் பட்டியலில் சேர்க்க அடையாளம் காணப்பட்டுள்ளது!

கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய தினத்தன்று பாடாங் தேசிய சின்னமாக அறிவிக்கபட்டது.இதன் அருகில் இருக்கும் மற்ற கட்டங்களும் தேசிய சின்னமாகவும் அமைகின்றது.

அதேபோல் வரலாற்று முக்கியத்துவ இடங்களாக அமைகிறது.இதில் விக்டோரியா தியேட்டர் மற்றும் கான்செர்ட் ஹால்,முன்னாள் உச்ச நீதிமன்றம்,நகர மண்டபமும், முன்னாள் நாடாளுமன்றம், Anex கட்டடம் உள்ளிட்டவைகளும் அடங்கும்.

பாடாங் சிங்கப்பூரின் அடுத்த UNESCO உலக மரபுடமைத் தலங்களின் பட்டியலுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல் அதைச் சுற்றி உள்ள கட்டட கலையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை நேற்று தேசிய மரபுடமை கழகம் அறிவித்தது.

அந்த பகுதி The Padang Civic Ensemble என்று அழைக்கப்படுகிறதாக கூறியது.

அந்த பகுதி மனித வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தைப் பிரதிபலிப்பதாக கழகம் கூறியது.