பயணிகளே!! இனி விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க தேவையில்லை!!

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.

பொதுவாக நம்மில் பலர் விமானம் புறப்படுவதற்கு 2,3 மணி நேரத்துக்கு முன்பு நமது லக்கேஜ்களை ஒப்படைப்பது வழக்கம்.அதில் தற்போது புதிய மாற்றத்தை சாங்கி விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 2 இல் புதியதோர் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.டெர்மினல் 2 -இல் பயணிகளின் லக்கேஜ்களை வைப்பதற்கு Fully Automated Baggage முறையை அறிமுகப்படுத்துகிறது. பயணிகள் தங்களின் லக்கேஜ்களை ஒப்படைக்கும் முறையை இப்போது முழுவதுமாக தானியங்கு முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டட் மெஷினில் லக்கேஜ்களை ஒப்படைத்ததும் பைகளை ஆய்வு செய்து உள்ளே அனுப்பும். இதன்மூலம் மனிதத் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகள் தங்களின் லக்கேஜ்களை ஒப்படைத்து செக்-இன் செய்து கொள்ளலாம். பயணிகள் விரும்பினால் 2 நாட்களுக்கு முன்பே செக்-இன் செய்து கொள்ளலாம்.

பெட்டிகளை முன்கூட்டிய சமர்ப்பிப்பதற்கான நேரங்கள் விமான நிறுவனங்கள், விமானத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது.

Air Asia, Qantas மற்றும் Singapore Airlines (அமெரிக்காவை தவிர) ஆகியவற்றின் விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக 3-24 மணி நேரத்திற்குள் லக்கேஜ்களை ஒப்படைக்கலாம்.

Scoot விமானம் புறப்படுவதற்கு 3 முதல் 18 மணி நேரத்திற்கு முன்கூட்டியே சமர்ப்பிர்க்கலாம்.

ஜெட்ஸ்டார், கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் புறப்படும் நேரத்திற்கு முன் 3 முதல் 12 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கலாம்.

பயண நாளான அதே நாளில் விமானம் புறப்படுவதற்கு முன் குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்னதாக லக்கேஜ்களை ஒப்படைக்க வேண்டிய விமான நிறுவனங்கள் (பயண நாளில் விமான சேவை நேரம் மாறுபடலாம்) : Air France, Emirates, Fiji Airways, Finnair, Juneyao Air, KLM, Malaysia Airlines, Philippine Airlines, Thai Airlines, Turkish Airlines.