விமான சீட்டுகளின் சலுகை அறிவிப்பால் பயணிகள் குஷி…!!!

விமான சீட்டுகளின் சலுகை அறிவிப்பால் பயணிகள் குஷி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் ஸ்கூட் ஆகியவை மலிவான விமான டிக்கெட்டுகளை வழங்குகின்றன.

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பவர்களின் நீண்ட நாள் கனவு இந்தச் சலுகையால் நினைவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

420,000க்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இம்மாதம் 25ஆம் தேதி முதல் தள்ளுபடி வழங்கப்படும் என்று நிறுவனங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Time to fly எனும் கண்காட்சியை நடத்துவதால் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கீழ் 200,000 க்கும் மேற்பட்ட இருவழி டிக்கெட்டுகளும், ஸ்கூட் சேவைகளின் கீழ் 220,000 ஒரு வழி டிக்கெட்டுகளும் மலிவாக விற்கப்படும்.

பயணிகள் ஆன்லைனிலும் சலுகைகளைத் தேடலாம்.

இம்மாதம் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை ஆன்லைன் சலுகைகள் கிடைக்கும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான பயணத்திற்கு பயன்படுத்தலாம்.

இந்த தள்ளுபடி விலை கிட்டத்தட்ட 130
நகரங்களுக்கு பொருந்தும்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் அக்டோபர் 25,26,27 ஆகிய தேதிகளில் அறை எண் 401,402 இல் விமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.