சிங்கப்பூர் எல்லையை காரில் கடக்கும் பயணிகள் இனி பாஸ்போர்ட்டை காண்பிக்க தேவையில்லையா?!
சிங்கப்பூர் எல்லையை காரில் கடக்கும் பயணிகள் இனி பாஸ்போர்ட்டை காண்பிக்க தேவையில்லை.
அவர்கள் உட்லண்ட்ஸ் ,துவாஸ் சோதனை சாவடிகளில் குடியேற்ற நடைமுறைகளை முடிப்பதற்கு QR குறியீட்டை இனி பயன்படுத்தலாம் .
இந்த வசதி மார்ச் 19-ஆம் தேதி முதல் செயல்முறைக்கு வரும் .
சிங்கப்பூருக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்தலாம்.
அதற்கு நீங்கள் MyICA app-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
app-இல் QR code உருவாக்கப்படும். ஸ்கேன் செய்யும் போது தோன்றும் பக்கத்தில் 10 பேர் வரை தங்கள் விவரங்களை சமர்ப்பிக்கலாம்.
சிங்கப்பூரர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை சிங்பாஸ் வழியாக சமர்ப்பிக்கலாம் .
பயணிகள் சிங்கப்பூருக்கு ஏற்கனவே பயணம் செய்திருந்தால் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தால் போதும். ஆனால் சிங்கப்பூருக்கு முதல்முறையாக பயணிப்பவர்களுக்கு இது பொருந்தாது.
அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
இந்த புதிய அம்சத்தால் சோதனை சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.