அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டிலிருந்து மூன்றரை ஆண்டுகளாக உலகைச் சுற்ற திட்டமிட்டு இருந்த உல்லாச பயணக் கப்பலான Odyssey கடந்த மே மாதம் திடீரென பழுதடைந்தது.
இப்போது அவை சரி செய்யப்பட்டு கப்பலை இயக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக வில்லா வீ ரெசிடென்ஸ் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 650 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய Odyssey சொகுசுக் கப்பலின் பயணம் தொடங்கியுள்ளது.
7 கண்டங்கள் மற்றும் 425 துறைமுகங்களைக் கடந்து உலகை சுற்றி வர Odysseyக்கு கிட்டத்தட்ட 1,301 நாட்கள் வரை ஆகும்.
இந்தக் கப்பல் சிங்கப்பூர் வரைச் செல்லும்.சில பயணிகள் கப்பலை தங்களுடைய நிரந்தர வீடாக மாற்ற விரும்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பயணம் நான்கு மாதங்கள் தாமதமாகிவிட்டாலும் அடுத்த மூன்றரை வருடங்கள் உலகத்தை சுற்றி வரப்போவதை எண்ணி உற்சாகமாக இருப்பதாக ஒரு தம்பதியினர் தெரிவித்தனர்.
அவர்கள் கப்பலில் தங்கள் 50 வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடுகிறார்கள்.இந்நிலையில் பயணிகள் உலகைச் சுற்றி வரும் ஆவலில் சந்தோஷத்தில் திகைத்துள்ளனர்.