சிங்கப்பூரில் பணிபுரியும் பகுதி நேர பணியாளர்கள் இனி அவர்கள் பணிபுரியும் வீட்டிலுள்ள குழந்தைகளையும்,முதியவர்களையும் பராமரிக்க அனுமதிக்கப்படுவர்.
அதற்குக் காரணம் பகுதிநேர வீட்டு வேலைக்கான திட்டம் விரிவுப்படுத்தப்பட்டதே. இவ்வாறு மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது.
இதற்குமுன் அந்த திட்டத்தின்கீழ் வீட்டைச் சுத்தம் செய்வது, கார் கழுவுவது போன்ற சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
தற்போது,இனி குழந்தைகளையும், முதியவர்களையும் கவனித்துக் கொள்ளும் சேவைகளும் சேர்க்கப்படுகிறது.
இன்று அதன் முன்னோடி திட்டத்தை மனிதவள அமைச்சகம் தொடங்கி வைக்க உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சேரும் நிறுவனங்கள் தேவையான சேவைகளைச் சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்கு வழங்க இன்னும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்தலாம் என்று அமைச்சகம் தெரிவித்தது.
இத்தகைய சேவைகள் ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே தேவைப்படும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
25 நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள் 18 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், முதியோர்கள் ஆகியவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பராமரிக்க இந்த நிறுவனங்களின் சேவையை அணுகலாம் என்று அமைச்சகம் தெரிவித்தது.