Singapore Job Vacancy News

திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டம்! அதிபர் தேர்தல் திருத்த மசோதா தாக்கல்!

சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி, 6-ஆம் தேதி நாடாளுமன்றம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் அதிபர் தேர்தல் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். இதனை பிரதமர் Lee Hsien Loong தாக்கல் செய்வார் என்று தெரிவித்தன.

அதிபர் தேர்தலை வரும் செப்டம்பர்,13-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்.அதிபர் ஹலிமா யாக்கோபின் ஆறாண்டு தவணைக் காலம் அன்றைய தினம் தான் முடிவடைகிறது. இந்த முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் அனைத்து இனத்தவரும் போட்டியிடலாம்.

2017-இல் அதிபர் தேர்தலில் போட்டியிட மலாய்ச் சமூகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனை பற்றி இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதன்பின் அதிபர் தேர்தல் முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.இதில் பிரச்சாரம் செய்வது, பொது கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றை அடங்கும்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் வீட்டு விலை,Keppel ஊழல் விவகாரம்,SPH Media நிறுவனத்தின் விநியோக எண்ணிக்கை அதிகமாக காட்டப்பட்டது முதலியவற்றைப் பற்றியும் விவாதிக்கப்படும்.