“சிங்கப்பூரை முன்னோக்கி எடுத்துச் சொல்லக்கூடிய PAP வேட்பாளர்களை இழக்கக்கூடாது”- திரு.வோங்

"சிங்கப்பூரை முன்னோக்கி எடுத்துச் சொல்லக்கூடிய PAP வேட்பாளர்களை இழக்கக்கூடாது"- திரு.வோங்

சிங்கபூர்: பிரதமர் லாரன்ஸ் வோங் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரை முன்னோக்கி அழைத்துச் செல்லக்கூடிய தலைவர்களை இழக்க நேரிடும் ஒரு முடிவை எடுப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று கூறியுள்ளார்.

புக்கிட் கொம்பாக் சிறப்புத் தொகுதியில் சனிக்கிழமை( ஏப்ரல் 26) சுவா சூ காங் தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

ஆளும் கட்சியை கடினமாக உழைக்க வைப்பதற்காக, எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இன்னும் சில இடங்களைக் கொடுப்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று வாக்காளர்களிடம் கூறினார்.

உண்மையில், அது மக்கள் செயல் கட்சியை பலவீனப்படுத்தும் என்று கட்சியின் பொதுச் செயலாளரான திரு. வோங் கூறினார்.

திரு. தியோ சீ ஹியென், திரு. ஹெங் சுவீ கியெட், டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் மற்றும் டாக்டர் இங் எங் ஹென் போன்ற அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் ஓய்வு பெறுவதை பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தல் ஆட்சிக்கு வரக்கூடிய பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார்.

அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, 20 ஆண்டுகள் வரை சிங்கப்பூருக்கு சேவை செய்யக்கூடியவர்கள் என்று பிரதமர் கூறினார்.