Tamil Sports News Online

சிங்கப்பூரில் பால்மாவு,பொம்மை திருட்டு சம்பவம்! மூன்று ஆண்டு சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் கடந்த மாதத்தில் பால்மாவு திருட்டு சம்பவ புகார்கள் காவல்துறை அதிகம் வருவதாக கூறப்பட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு பேரங்காடிகளிலிருந்து 80 பால்மாவு டின்கள் திருடப்பட்டதாக காவல்துறை அதன் புள்ளி விவரம் காட்டுவதாக கூறியது.

அதில் ஒரு திருட்டு சம்பவத்திற்கு இன்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

34 வயதுடைய Chen Yixian Joshua கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன்,22-ஆம் தேதி waterway point இல் உள்ள NTUC FairPrice இல் இருக்கும் பால்மாவு டின்களைத் திருடி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் 8 பால்மாவு டின்களைத் திருடியதாக கூறப்பட்டது.அவர் பேரங்காடியில் Enfagrow pro A+ stage 3 பால்மாவு சுமார் 900 கிலோ எடை மதிப்பிலான பால்மாவு டின்களைத் திருடி உள்ளார்.

அப்போது அதனைப் பார்த்த பேரங்காடி பாதுகாவலர் Chen யைத் தடுத்தி நிறுத்தினார்.அவரிடம் இருந்து பால்டின்கள் கைப்பற்றினர்.

இதன் மொத்தம் விலை 422.40 வெள்ளி ஆகும்.

அது மட்டுமல்லாமல் அவர் வைத்து இருந்த பையில் பொம்மைகளும் இருந்தது. அந்த பொம்மைகளில் Toys R US முத்திரை பதியப்பட்டு இருந்தது.

அவரைக் கைது செய்யப்பட்ட போது அவருடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். பால் மாவு டின்களை Carousell யில் விற்பதற்காக திருடியதை ஒப்புக் கொண்டார்.

பொம்மைகளை அவருடைய குழந்தைகளுக்காக திருடியதாகவும், பால் டின்களை மின் வணிகதளமான Carousell லில் விற்பதற்காக திருடியதாக தன் குற்றத்தை நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

இந்த குற்றச்சாட்டில் அவருக்கு சொந்தம் இல்லாத 6 பால் மாவு டின்கள் வைத்திருந்ததும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

திருடிய குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பேரங்காடிகளிலிருந்து பால்மாவு டின் திருட்டு சம்பவத்தால் கிட்டதட்ட 27,000 வெள்ளி நஷ்டம் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டது.