லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் எதிர்பாராத வகையில் காட்டுத்தீ பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நடிகர்கள் ,இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர்.

கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் பல கட்டிடடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

பலர் தங்கள் வீடுகளை விட்டு தங்கள் குடும்பங்களுடன் வெளியேறியுள்ளனர்.மேலும் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியேறியுள்ளனர்.

இந்த காட்டுத்தீயால் தென் கலிபோர்னியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பலத்த கற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது .இதனால் நெருப்பு இன்னும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

தீயணைப்பு முயற்சிக்கான முழு செலவுகளையும் மத்திய அரசாங்கம் ஏற்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

வானிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் தீயணைப்பு முயற்சிக்கு உதவ கனடா இரண்டு வாகனங்களை அனுப்புகிறது.

அதிகாரத்துவ பயணமாக திருவாட்டி ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரைன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதிகாரத்துவ பயணமாக திருவாட்டி கமலா ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரைன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபராக அதுவே அவரது கடைசி பயணமாக இருக்கும்.

அதிபர் ஜோ பைடனும் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.