சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்களுக்கு வரும் மாதங்களில் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலங்களில் நிலவி வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு இது உதவும் என்று கூறினார்.
கட்டணத் தள்ளுபடிகள், 300 வெள்ளி மதிப்புள்ள சமூக கவுன்சில் டெபிட் வவுச்சர்கள் (CDC) மற்றும் 600 வெள்ளி பண உதவி ஆகியவை இதில் அடங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
இந்த உதவியை அரசு மட்டும் செய்யவில்லை பல நிறுவனங்களும் இதில் பங்களிக்கின்றன.
உதாரணமாக, DBS வங்கி உணவகங்களில் உணவு தள்ளுபடி வழங்குகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கேன்டீன் உணவுகளுக்கு வங்கி சுமார் 8 மில்லியன் வெள்ளியை உதவியாக வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சில அறக்கட்டளைகள் மளிகைப் பொருட்களை வழங்குவதன் மூலம் ஆதரவற்றவர்களுக்கு உதவுகின்றன.
NTUC FairPrice உட்பட பல்வேறு பல்பொருள் அங்காடிகளும் இதே போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
விற்கப்படாத அல்லது மிச்சப்பட்ட உணவுகளை மறுபகிர்வு செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் மூலம், சிங்கப்பூரர்களின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க ஒருவருக்கொருவர் ஒத்துழைத்த அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூர் இந்த ஆண்டு அதிகப் பொருளாதார வளர்ச்சியையும் பணவீக்கம் குறைவதையும் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.
ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு (2025) பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை அரசு கண்காணித்து வருகிறது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
Follow us on : click here