சிங்கப்பூரில் OpenAI ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ChatGPT செயலியின் தாய் நிறுவனமான OpenAI நிறுவனம் இந்த ஆண்டு சிங்கப்பூர் அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் சிங்கப்பூரின் தலைமையே இதற்குக் காரணம் என்று நிறுவனம் கூறியது.

பிராந்தியத்தின் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கப்படுவதை இது உறுதி செய்யும்.

உலகளவில் ChatGPTயை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வாராந்திர பயனர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

சிங்கப்பூரில் OpenAI தனது முதல் Developer Day மாநாட்டை நவம்பர் 21 இல் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.