உரிமையாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கு வழங்கப்படும் ஒருமுறை சொத்து வரி தள்ளுபடி...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உரிமையாளர்கள் தங்கும் அனைத்து வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக வீடுகளுக்கும் அடுத்த ஆண்டு முதல் 20 சதவீதம் வரை சொத்து வரி தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடியானது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
நிதி அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், உரிமையாளர் வசிக்கும் தனியார் வீடுகளுக்கு அடுத்த ஆண்டு முதல் 15 சதவீத சொத்து வரி தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்தது.
அது கிட்டத்தட்ட 1,000 வெள்ளி வரை சொத்து வரி விலக்கு அளிக்கப்படும்.
அடுத்த ஆண்டு (2025)ஜனவரி 1ம் தேதி முதல் வீட்டின் ஆண்டு மதிப்பானது உயர்த்தப்படும் என்று இந்த ஆண்டு பிப்ரவரி பட்ஜெட்டின் போது அரசு அறிவித்தது.
குறைந்த பிரிவில், ஆண்டு அடிப்படையில் வீட்டின் மதிப்பு வரம்பானது 8,000 வெள்ளியில் இருந்து 12,000 வெள்ளியாக உயர்த்தப்படும்.
உயர் பிரிவில், வீட்டின் ஆண்டு மதிப்பு 100,000 வெள்ளியில் இருந்து 140,000 வெள்ளிக்கு மேல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
வீட்டு உரிமையாளர்கள் அதே வரிகளை அல்லது குறைந்த சொத்து வரிகளை செலுத்துவார்கள்.
ஒரு அறை மற்றும் இரண்டு அறைகள் கொண்ட மாநகராட்சி வீடுகள் அடுத்த ஆண்டும் சொத்து வரி செலுத்த தேவையில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் வரி செலுத்த வேண்டிய தேதி குறித்து IRAS இலிருந்து SMS அல்லது மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறுவார்கள்.
சொத்து உரிமையாளர்கள் 12 மாதங்கள் வரை வட்டி இல்லாத தவணைகளை அனுபவிக்க GIRO க்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஒரு முறை விலக்கு பெறலாம்.
மேலும் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள், பணம் செலுத்த வேண்டிய தேதிக்கு முன், பொருத்தமான கட்டணத் திட்டத்தைப் பற்றி அறிய IRASஐ தொடர்பு கொள்ளலாம்.
Follow us on : click here