ஆஸ்திரேலியாவில் காற்றாலைக்கு அடியில் ஒருவர் சிக்கிக் கொண்டதால் அவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மெல்பர்னில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Golden Plains site எனும் காற்றாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க அங்கு பெரிய காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
60 மீட்டருக்கும் அதிகமான உயரமான பாகங்கள் 22,000 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.
காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில் அந்த நபர் உடல் நசுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.