இந்தோனேஷியாவில் தடம் பதிக்க நினைக்கும் உலகப் பணக்காரர்களில் ஒருவர்!!

இந்தோனேஷியாவில் தடம் பதிக்க நினைக்கும் உலகப் பணக்காரர்களில் ஒருவர்!!

பாலித் தீவில் எலான்மஸ்க்-கின்
ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவையை நிறுவுகிறது.

உலகின் பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க்.

உலகின் மிகப் பெரும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள பாலியின் தலைநகர் டென்பசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலான் மஸ்க் மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவும் கலந்து கொண்டனர்.

கடல்சார் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் LUHUT BINSAR PANDJAITAN கூறியதாவது,
அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில், தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை அளிப்பது என்பது சவால்கள் ஒன்றாக கருதப்படுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் கடல்சார் துறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு உதவ ஸ்டார்லிங்கின் இணையசேவையின் பங்கு தேவை உள்ளதாக கூறப்பட்டது.

இந்தோனேசியாவில் இணைய சேவையினை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான டிரான்ஸ்ஸீவர், குறுகிய தூரத்துக்கு மட்டுமே பயனளிப்பதாக இருக்கிறது. இதன் காரணமாக பல தீவுகள் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

அதேசமயம் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வேகமான இணையசேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் சுதந்திர நூற்றாண்டு விழாவின்போது பேசிய அதிபர் உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக நாட்டை கொண்டு வருவதேயே நோக்கமாக கொண்டு அரசு செயல்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும் இத்தகைய
முயற்சிகள் அனைத்தும் ‘கோல்டன் இந்தோனேசியா 2045’ என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதாக கூறியிருந்தார்.

ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் செயல்பட்டு வரும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவிலும் தனது தடத்தை பதிக்க ஆர்வம் காட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது.ஸ்டார்லிங் இணைய சேவை பல ஆயிரம் செயற்கைக்கோள்களை கொண்டுள்ளது. பூமிக்கு அருகில் உள்ள துணைச் சுற்றுப்பாதையில் வெறும் 550 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருவதாகவும்,
மற்ற செயற்கைக்கோளுடன் ஒப்பிடும்போது ஸ்டார்லிங் மிகக் குறைவாக இருப்பதால் அதிவேக இணைய இணைப்பை வழங்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.