பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்று மணிலா கடற்பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
MT Terra Nova என்ற எண்ணெய் கப்பல் மத்திய நகரமான Iloil நோக்கி அதிகாலையில் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கப்பலில் சுமார் 1.5 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை எரிபொருள் எண்ணெய் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எண்ணெய் முழுவதும் கடலில் கலந்ததால் அப்பகுதியே ஒரே எண்ணெய் படலமாக தெரிந்தது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் நடைபெறுகிறது.
மேலும் அப்பகுதியில் பலத்த காற்று மற்றும் அதிக அலைகள் நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக இருந்ததாக போக்குவரத்து அமைச்சர் ஜேமி பட்டீஸ்டா தெரிவித்தார்.
கப்பலில் இருந்த 17 பணியாளர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.