இணைய மோசடியில் பணத்தை இழந்த மூதாட்டி..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி தடுப்புப் பிரிவானது ஹாங்காங் அதிகாரிகளுடன் இணைந்து ஒரு பெரிய மோசடியை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன் மூலம் சுமார் 197,000 வெள்ளி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வந்த செய்தியை 73 வயது மூதாட்டி ஒருவர் பார்த்துள்ளார்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த மூதாட்டியின் வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக மோசடி செய்தவர் கூறியுள்ளார்.
பின்னர் வங்கி கணக்கு விவரங்களை சரி பார்ப்பது போல் நடித்து ஹாங்காங் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்மணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், மோசடி செய்தவர் சைபர் கிரைம் பிரிவு அதிகாரி போல் பேசி மூதாட்டியை ஏமாற்றியது தெரியவந்தது.
போலீசார் பொதுமக்களுக்கு மோசடி சம்பவங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால் வங்கி மற்றும் காவல்துறைக்கு தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் வங்கிக் கணக்கைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் 2FA போன்ற அம்சங்களைப் பயன்படுத்துமாறு கூறப்பட்டது.
ScamShield அல்லது இணையதளம் (www.scamshield.gov) மூலம் இணைய மோசடிகளின் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மோசடிகள் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக காவல்துறை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குத் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் 1800-255-0000 என்ற எண்களை தொடர்பு கொண்டோ அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையதளம் மூலமாகவோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg