மூளையில் அறுவை சிகிச்சை செய்த முதியவர் கவலைக்கிடம்..!!!

மூளையில் அறுவை சிகிச்சை செய்த முதியவர் கவலைக்கிடம்..!!!

ஹாங்காங்கில் முதியவர் ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கருவி திடீரென செயலிழந்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யாவ் மா தே பகுதியில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் 66 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருக்கு சிறுமூளை தமனி குறைபாடு காரணமாக அவருக்கு மூளையில் அறுவை செய்யப்பட்டது.

இதனால் மூளையில் இரத்த ஓட்டத்தை கண்காணிக்க ஒரு சாதனம் பயன்படுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது ஒரு கட்டத்தில் இரத்த ஓட்டத்தைக் காட்டும் சாதனம் தோல்வியடைந்தது.

அதை கவனித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சையை நிறுத்தினர்.

இதனால் அந்த நபர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதன் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியது.

மருத்துவமனை தற்போது இந்த கருவியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளது.

மேலும் கருவியை பரிசோதிக்குமாறு சாதனத்தின் உற்பத்தியாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here ⬇️