சாங்கி கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க்   கசிவு!!

சிங்கப்பூர்: சாங்கி கடலில் கப்பல் ஒன்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

சுமார் 5 டன் எண்ணெய் கடலில் கலந்ததாக கூறப்படுகிறது.இச்சம்பவம் நேற்று (அக்டோபர் 28) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எண்ணெய் கசிவைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இன்று காலை 8 மணி வரை கடலில் எண்ணெய் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மலேசிய அதிகாரிகளுக்கு எண்ணெய் படலம் காணப்படுவதைக் கண்காணிக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

கரையோரங்களில் ஏதேனும் எண்ணெய் படலம் காணப்படுகிறதா என்பதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களும் எச்சரிக்கை செய்யப்பட்டன.

எண்ணெய் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை சுத்தம் செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.